பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாடு $45 திருமங்கையாழ்வார் பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட புகழ்ஆனாய்! இகழ்வாய தொண்ட னேன்நான் 'என்ஆனாய்? என் ஆனாய்?' என்னால் அல்லால் என்அறிவன் ஏழையேன். உலகம் ஏத்தும் தென்ஆனாய்! வடவானாய்! குடபால் ஆனாய்! குணபாலது ஆயினாய்! இமையோர்க்கு என்றும் முன்ஆனாய்! பின்ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக் களத்தானாய் முதல்ஆ னாயே! தம்மாழ்வார் பூந்துழாய் முடியார்க்குப் பொன்ஆழிக் கையார்க்கு ஏந்துநீர் இளங்குருகே திருமூழிக் களத்தார்க்கு ஏந்துபூண் முலைபயந்துஎன் இணைமலர்க்கண் ணிர்ததும்ப, தாம்தம்மைக் கொண்டு.அகல்தல் தகவுஅன்றுஎன்று உரைவீரே. 63. குட்டநாடு (திருப்புலியூர், புலியூர்) மாயப்பிரான்-பொற்கொடி நாச்சியார் வழிபட்டநாள் : 28-7-58, 4-4-65. 1. திருமங்கையாழ்வார் 1 2. நம்மாழ்வார் 11. (ஆக. 12) செங்கன்னூரிலிருந்து மேற்கே 3 கல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் பேராலி, தண்கால், நறையூர், திருப்புலியூர்