பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாடு 347 65. திருநாவாய் நாராயணன்-மலர்மங்கை வழிபட்டநாள் : 22-7-58, 6-4-65. 1. திருமங்கையாழ்வார் 2, 2. நம்மாழ்வார் 11. (ஆக 13) சென்னை-கள்ளிக்கோட்டை இருப்புப் பாதையில் சோரனூர் கடந்து திருநாவாயா என்ற பெயரோடு இருக்கும் இரயில் நிலையத்திலிருந்து 1% கல் அளவு. கோயில் ஆற்றங்கரை மேல் இருக்கின்றது. இருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் துவாய புள்ஊர்ந்து வந்து. துறைவேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை. தேவாதி தேவனை, செங்கமலக் கண்ணானை. நாவாயு ளானை நறையூரில் கண்டேனே. நம்மாழ்வார் நாளேல் அறியேன் எனக்குள் ளன.நானும் மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்; நீளார் மலர்ச்சோ லைகள்து.ழ் திருநாவாய் வாள்ஏய் தடங்கண் மடப்பின்னை மணாளா! 66. திருவல்லவாழ் (திருவல்லாய்) கோலப்பிரான்-செல்வத்திருக்கொழுந்து வழிபட்டநாள் : 27-7-58, 4-4-65 1. திருமங்கையாழ்வார் 11, 2. நம்மாழ்வார் 11. (ஆக. 22) திருவண்வண்டுளிலிருந்து வடக்கே நாலுகல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.