பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 திருத்தலப்பயணம் திருமங்கையாழ்வார் மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பதோர் சொல்லைநீ துயர்எனக் கருதி னாயேல், நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள். நாளை உண்ட மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! நம்மாழ்வார் மான்ஏய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய வான்ஆர் வண்கமுகும் மதுமல்லிகை யும்கமழும் தேன்.ஆர் சோலைகள்து.ழ் திருவல்ல வாழ்உறையும் கோனா ரை.அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? 67. திருவண்வண்டுர் (திருவமுண்டுர்) பாம்பணையப்பன்-கமலவல்லி வழிபட்டநாள் : 28-7-58 4-4-65 நம்மாழ்வார் : 11 திருப்புலியூருக்கு வடக்கே 3. ೬೯Gು தொலைவு. செங்குன்றுரிலிருந்து மேற்கே 5 கல் தொலைவு. மேற்கே திருமுக மண்டலம். நின்ற திருக்கோலம், நம்மாழ்வார் அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்! விடிவை சங்குஒலிக் கும்திரு வண்வண் டூர்உறையும் கடிய மாயன்தன் னைக்கண்ண னை.நெடு மாலைக்கண்டு கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே