பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாடு 349 68. திருவாட்டாறு ஆதிகேசவப்பெருமாள்-மரகதவல்லி வழிபட்டநாள் : 27-7-58, 2-4-85 நம்மாழ்வார் 11 நாகர்கோவிலிலிருந்து, 16 கல் தொலைவு திருவநத்த புரத்திலிருந்து 28 கல் தொலைவு. கோயில் நல்ல உயரமான இடத்திலிருக்கிறது. பெரிய கோயில், கிடந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், நம்மாழ்வார் அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு. ஆழியான் அருள்தருவான் அமைகின்றான். அதுநமது விதிவகையே. இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன். மருள்ஒழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே 69. வித்துவக்கோடு உய்யவந்தபெருமாள்-வித்துவக்கோட்டுவல்லி வழிபட்டநாள் : 11-3-59, 6-4-65. குலசேகராழ்வார் 10 சோரனூர்-குருவாயூர் நெடுஞ்சாலையில் சோரனூரிலிருந்து 10 மைலிலும், குருவாயூரிலிருந்து 20 மைலிலும் இத்தலம் இருக்கிறது. திருவித்துவக்கோடு என்று அந்த இடத்தில் பலகை இருக்கும். அங்கிருந்து % மைல் அளவில் கோயிலிருகின்றது. கோயில் ஆற்றங் கரையில் இருக்கின்றது. கோவிலுக்குள் துழைந்தவுடன் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். பின்னேதான் பெருமாள். கிடந்த திருக்கோலம். தெற்கே திருமுக மண்டலம். குலசேகரப் பெருமாளின் அற்புதமான பாடல் சிறப்புப் பெற்றது இத்தலம். குலசேகராழ்வார் கண்டார்இ கழ்வனவே காதலன்தான் செய்திடினும், கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல் விண்தோய்ம திற்புடைசூழ் வித்துவக்கோட்டு அம்மா! நீ கொண்டு.ஆளாய் ஆகிலும்உன குரைகழலே கூறுவனே.