பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 திருத்தலப்பயணம் 70. திருக்கடித்தானம் அற்புதநாராயணன்-கற்பகவல்லி வழிபட்டநாள் : 27-7-58, 4-4-85 நம்மாழ்வார் 11 திருவல்லவாழுக்கு வடக்கே மூன்று கல் தொலைவு. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். நம்மாழ்வார் எல்லியும் காலையும் தன்னை நினைத்துஎழ நல்ல அருள்கள் தமக்கேதந்து அருள்செய்வான் அல்லிஅம் தண்ணம் துழாய்முடி அப்பன்ஊர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. 71. திருவாறன்விளை (ஆறம்முளை) திருக்குறளப்பன்-தாமரையாள் வழிபட்டநாள் : 27-7-58, 4-4-85 நம்மாழ்வார் 11 திருச்செங்குன்றுருக்குக் கிழக்கே கெனால் வழி நாலுகல் தொலைவு கொட்டாரக்கரையிலிருந்து 37 கல் தொலைவு. நின்ற திருக்கோலம். வடக்கே திருமுக மண்டலம். நம்மாழ்வார் ஒன்றும்தில் லாகெடும் முற்றவும் திவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்! அன்றுஅங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணிநெடுந் தோள்புணர்ந்தான் என்றும்எப் போதும்என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின் றபிரான் நின்ற அணிதிரு வாறன் விளைனன்னும் நீள்தக ரம்அ துவ்வே.