பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54 திருத்தலப்பயணம் 73. திருக்கோவலூர் திரிவிக்கிரமன் உலகளந்த பெருமாள் பூங்கோவல் நாச்சியார் வழிபட்டநாள் : 4-12-57, 3-12-65. 1. திருமங்கையாழ்வார் 18, 2. பொய்கையாழ்வார் 2: 3. பூதத்தாழ்வார் 1 (ஆக 21) விழுப்புரம்-காட்பாடி இருப்புப் பாதையில் ஒர் இரயில் நிலையம், இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே இரண்டு கல் தொலைவில் பெண்ணை யாற்றின் தென் கரையில் கோயில் இருக்கிறது. நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். மர்பலிச் சக்கரவர்த்திக்காக, மூன்றடியால் உலகத்தை அளந்த திருக்கோலம். மூர்த்தியின் உருவம் மிகப் பெரியது. கோயில் பழமையான பெரியகோயில். இத்தலத்தில்தான் முதலாழ்வார் மூவரும் பாதி நாளிரவில்கொட்டும் மழையில் ஒட்டுத் திண்ணையில் மூன்றுதிருவந்தாதிகளும் பாடினர் என்ப. இக்கோயிலுக்கு அண்மையில் கோவல் வீரட்டம் என்ற தேவாரத் தலமிருக்கின்றது. திருமங்கையாழ்வார் வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுஏந்தி, உலகம் ஆண்டு. வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேல் உய்த்த வேள்முதலா வென்றான்.ஊர் விந்தம் மேய. கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்துழி நெடுமறுகில் கமல வேலி, பொற்புடைய மலைஅரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே! பொய்கைஆழ்வார் நீயும் திருமகளும் நின்றாயால், குன்றுஎடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா!-வாயில் கடைகழியா உள்புகாக் காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி இனி. பூதத்தாழ்வார். (தஞ்சை மாமணிக் கோயில் தலம் பார்க்க.)