பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அத்தியூர் (காஞ்சி) வரதராசப்பெருமாள்-பெருந்தேவி வழிபட்டநாள் : 41-9-57, 23-1-86. 1. திருமங்கையாழ்வார் 4, 2. பூதத்தாழ்வார் 2: 3. பேயாழ்வார் 1: (ஆக 7.) இரயில் நிலையம். பெரிய நகரம். மிகப் பழைய பதி பல்லவர்களின் அரசு இருக்கைத் தலைநகரம். இந்நகர எல்லைக்குள் மங்களாசாசனம்பெற்ற திருப்பதி பதினான்கும், தேவாரம் பெற்ற சிவத்தலம் ஐந்தும், இவையன்றி இன்னும் பல கோயில்களும் இருக்கின்றன. காஞ்சி நகரத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றனர். ஒன்று சிவகாஞ்சி அல்லது பெரிய காஞ்சி, இன்னொன்று விஷ்ணு காஞ்சி அல்லது சின்னக் காஞ்சி, சின்னக் காஞ்சிபுரத்தில் 'அத்திகிரி', 'திருவெஃகா', 'அட்டபுயகரம்', 'திருத்தண்கா, வேளுக்கை' என்னும் ஐந்து திருப்பதிகள் இருக்கின்றன. பெரிய காஞ்சிபுரத்தில் ஊரகம் 'நீரகம்', 'காரகம்', 'கார்வானம்', 'கள்வனூர்', 'பாடகம்'. 'நிலாத்திங்கள் துண்டம்', 'பவளவண்ணம்', 'பரமேசுர விண்ணகரம்' ஆகிய ஒன்பது திருப்பதிகள் இருக்கின்றன. காஞ்சியிலுள்ள பெருமாள்கோவில்களுள் பெரியது.அத்திகிரி வரதராசப் பெருமாள் கோயில். இக்கோயில் மலையின்மீது இருக்கின்றது. இருந்த திருக்கோலம். மேற்கே திருமுக மண்டலம்.