பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 திருத்தலப்பயணம் திருமங்கையாழ்வார் 'கல்லுயர்ந்த நெடுமதிள்து.ழ் கச்சி மேய களிறு'என்றும், கடல்கிடந்த கனியே' என்றும், 'அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணிஅழுந்துளர் நின்றுஉகந்த அம்மான்' என்றும், சொல்உயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் துளமுறுவல் நகைஇறையே தோன்றநக்கு. மெல்விரல்கள் சிவப்பு:எய்தத் தடவி ஆங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே, பூதத்தாழ்வார் என்நெஞ்ச மேயான் என் சென்னியான் தானவனை வன்நெஞ்சம் கிண்ட மணிவண்ணன்-முன்னம்சேய் ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகுஏத்தும் ஆழியான் அத்தியூ ரான். பேயாழ்வார் சிறந்தஎன் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்தசிர் நீள்கச்சி யுள்ளும்-உறைந்ததுவும் வேங்கடமும், வெஃகாவும். வேளுக்கைப் பாடியுமே தாம்கடவார் தண்துழா யார். பெருந்தேவனார் நீலமே! காரின் முகிலே! நெடும்கடலின் கோலமே! அத்திகிரிக் கோமானே!-மூலம்என மாத்தா மரைமடுவின் மால்யானை ஒலம்இடக் காத்தாய்! கடைபோகக் கா. 75. அட்டபுயகரம் (அவுடபுஜம்) ஆதிகேசவப்பெருமாள்-அலர்மேல்மங்கை வழிபட்டநா-ளள் : 11-9-57, 23-1-66, 1. திருமங்கையாழ்வார் 11, 2. பேயாழ்வார் 1: (ஆக 12.) இது சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ளது. நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம்.