பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 359 திருமங்கையாழ்வார் மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமோகன் தன்வலி தன் புகழ் சூழ்ந் தகச்சி அட்ட புயகரத்து ஆதிதன்னை. கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சிர்கலி கன்றி.குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்குஇடம் வைகுந்தமே. பேயாழ்வார் - தொட்ட படைஎட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று-குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்துஎறிந்த சக்கரத்தான் தாள்முதலே நங்கட்குச் சார்வு. 76. திருத்தண்கா (விளக்கொளிக்கோயில்) விளக்கொளிப்பெருமாள்-மரகதவல்லி வழிபட்டநாள் : 11-9-57, 23-1-66, திருமங்கையாழ்வார் 2. சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள திருப்பதி. நின்ற திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். வேதாந்த தேசிகர் பிறந்த இடம்.