பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 திருத்தலப்பயணம் பூதத்தாழ்வார் உற்று வணங்கித் தொழுமின். உலகுஏழும் முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்-பற்றிப் பொருந்தாதான் மார்பிடத்து பூம்பா டகத்துள் இருந்தானை. ஏத்தும்என் நெஞ்சு. பேயாழ்வார் ("திருக்குடந்தை" தலப்பாடல் பார்க்க) 79. நீரகம் சகதிசப்பெருமாள்-நிலமங்கைவல்லி வழிபட்டநான் : 12-9-57, 23-1-66. திருமங்கையாழ்வார் 1. இது பெரிய காஞ்சிபுரத்தில் உள்ளது. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். உலகளந்த பெருமாள் கோவிலில் வடக்குப் பிரகாரத்தில் இச்சந்நிதி இருக்கிறது. திருமங்கையாழ்வார் நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்! நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்! உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா! காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சின் உள்ளாய்! பெருமான் உன் திருவடியே பேணி னேனே.