பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器链 திருத்தலப்பயணம் திருமழிசையாழ்வார் நன்றிருந்து யோகநீதி தண்ணுவார்கள் சிந்தையுள் சென்றிருந்து திவினைகள் தீர்த்ததேவ தேவனே! குன்றிருந்த மாடநீடு பாடகத்தும் ஊரகத்தும் நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததுஎன்ன நீர்மையே? திருமங்கையாழ்வார் 'கல்எடுத்துக் கல்மாரி காத்தாய்' என்றும். காமருபூங் கச்சி.ஊ ரகத்தாய்' என்றும் 'வில்இறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய்' என்றும், வெஃகாவில் துயில்அமர்ந்த வேந்தே' என்றும். மல்அடர்த்து மல்லரைஅன்று அட்டாய்' என்றும். மா.கிண்ட கைத்தலத்துஎன் மைந்தா' என்றும், சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே' என்றும். துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே! 82. திருவெஃகா (யதோத்காரி சந்நிதி) சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோமளவல்லி வழிபட்டநாள் : 21-9-57, 23-1-86; 1. திருமழிசையாழ்வார் 3, 2. திருமங்கையாழ்வார் 8: 3. பொய்கையாழ்வார் 2, 4. பேயாழ்வார் 4 5.நம்மாழ்வார் : (ஆக 15) இது சின்னக் காஞ்சியிலுள்ள ஒரு தலம். கிடந்த திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். பொய்கையாழ்வார் பிறந்தருளிய தலம்.