பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 365 திருமழிசையாழ்வார் (ஊரகம், பாடகம், அன்பில் தலப்பாடல்கள் பார்க்க) திருமங்கையாழ்வார் கூந்த லார்மகிழ் கோவல னாய்.வெண்ணெய் மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே. பொய்கையாழ்வார் வேங்கடமும். விண்ணகரும், வெஃகாவும், அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்நகரும்-நான்குஇடத்தும் நின்றான். இருந்தான். கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர். பேயாழ்வார் பொருப்பிடையே நின்றும், புனல்குளித்தும். ஐந்து நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா-விருப்புடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர் துய்க் கைதொழுதால் அஃகாவே திவினைகள் ஆய்ந்து. நம்மாழ்வார் நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம்என்று கோதுகொண்ட வேனிலம் செல்வன் சுவைத்துஉமிழ் பாலை. கடந்தபொன்னே! கால்நிலம் தோய்ந்துவிண் னோர்.தொழும்கண்ணன்வெஃகாஉதுஅம்பூந் தேன்இளஞ் சோலைஅப் பாலது.எப் பாலைக்கும் சேமத்ததே. 83. காரகம் கருணாகரப்பெருமாள்-பத்மாமணி நாச்சியார் வழிபட்டநாள் : 12-9-57, 23-1-66. திருமங்கையாழ்வார் 1. இது பெரிய காஞ்சிபுரத்திலுள்ளது. உலகளந்த பெருமாள் கோயில் தாயார் சந்நிதிக்கு எதிரில் இருக்கிறது. நின்ற திருக்கோலம் தெற்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் (திருநீரகம் தலப்பாடல் பார்க்க)