பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ இருத்தலப்பயணம் மணிவாசகப்பெருமான் "திருச்சிற்றம்பலக்கோவையார்" பாடி அருளிய பதி. சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்து அந்தாதி பாடிய புண்ணியப் பதி. சேக்கிழார் அடிகள் "பெரியபுராணம்" பாடி, யானை மீது இவர்ந்து, அநபாய சோழனால் சிறப்பிக்கப் பெற்று அரங்கேற்றிய அழகிய பதி. நம்பியாண்டார் நம்பிகால் தேவாரப்பதிகங்கள் கண்டெடுக்கப்பெற்ற திருத்தலம். இன்னோரன்ன பெருமைகள் பல வாய்ந்த தில்லைத் திருத்தலமே "கோயில்" என்பது. சாம்பத்தர் செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே. அப்பர் அரும்துணையே, அடியார்தம் அல்லல் திர்க்கும் அருமருந்தை. அகல்ஞாலத்து அகத்துள் தோன்றி வரும்துணையும், சுற்றமும், பற்றும் விட்டு. வான்புலன்கள் அகத்துஅடக்கி, மடவா ரோடும். பொருந்துஅணைமேல் வரும்பயனை, போகம் மாற்றி, பொதுநீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெரும்துணையை, பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. சுந்தரர் கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட்டு அறுப்பிப் பானை, அருமையாம் தன் உலகம் தருவானை, மண்ணுலகம் காவல் பூண்ட