பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 367 86. பவளவண்ணம் (பவளவண்ணர்சந்நிதி) பவளவண்ணர்-பவளவல்லி வழிபட்டநாள் : 11-9-57, 24-1-66 திருமங்கையாழ்வார் : 1.0 இது பெரிய காஞ்சியில் உள்ளது. இருந்த திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர் மல்லையாய்! மதிள்கச்சி ஊராய்! பேராய்! கொங்கத்தார் வளம்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்! பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா! எங்குஉற்றாய் எம்பெருமான்! உன்னை நாடி ஏழையேன் இங்ங்னமே உழிதர் கேனே. 87. பரமேச்சுரவிண்ணகரம் (வைகுண்டப்பெருமாள் கோயில்) பரமபதநாதன்-வைகுந்தவல்லி வழிபட்டநாள் : 12-9-57, 24-1-66 திருமங்கையாழ்வார் 10. இத்தலம் பெரிய காஞ்சியிலுள்ளது. இருந்த திருக் கோலம்:மேற்கே திருமுக மண்டலம். இது நல்ல வேலைப்