பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 திருத்தலப்பயணம் 92. திருஇடஎந்தை (திருவிடந்தை) நித்தியகலியாணர்-கோமளவல்லி வழிபட்டநாள் : 18-2-58, 29-1-66 திருமங்கையாழ்வார் : 18 சென்னையினின்றும் மகாபலிபுரத்திற்குக் கடற்கரையை ஒட்டிச்செல்லும் நெடுஞ்சாலையில்.மகாபலிபுரத்திற்கு மைல் முன்னால், சாலைக்கு அண்மையில், இத்தலம் இருக்கிறது. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் 'ஊழியில் பெரிதால் நாழிகை' என்னும் ஒண்சுடர் துயின்றதால்' என்னும், ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா! தென்றலும் தீயினில் கொடிதாம், தோழியோ!' என்னும் துணைமுலை சுரக்கும் சொல்லுமின் என்செய்கேன்' என்னும் ஏழைஎன் பொன்னுக்கு என்நினைந்து இருந்தாய் இடஎந்தை எந்தை பிரானே! 93. திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) தலசயனத்துஉறைவார்-நிலமங்கை வழிபட்டநாள் : 1.3-2-58, 29-1-66. 1. திருமங்கையாழ்வார் 26, 2. பூதத்தாழ்வார் 1. (ஆக 27) சென்னையினின்றும் கடற்கரையை ஒட்டிச்சாலை இருக்கிறது. 37கல் தொலைவு. கடற்கரை நகரம். கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.