பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாடு 373 பல்லவர் காலத்துச் சிற்பங்கள் நிறைய இருக்கின்றன. ஒரே கல்லில் செய்யப் பெற்ற பெரிய தேர், யானை முதலியன இருக்கின்றன. கடற்கரை ஓரத்தில் பெரும் பொருட் செலவில் பயணிகள் தங்கும் மாளிகை கட்டியுள்ளனர். பூதத்தாழ்வார் பிறந்தருளிய தலம் இது. திருமங்கையாழ்வார் ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான். வானத்தில் அவர்முறையால் மகிழிந்துஏத்தி வலம்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற, ஞானத்தின் ஒளிஉருவை நினைவார்என் நாயகரே. பூதத்தாழ்வார் (தஞ்சை மாமணிக் கோயில் தல்ப்பாடல் பார்க்க) 94. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள்-ருக்மிணிப்பிராட்டி வழிபட்டநாள் : 23-4-58, 22-1-86 1. திருமழிசையாழ்வார் 1, 2. திருமங்கையாழ்வார் 10. 3. பேயாழ்வார் 1 (ஆக. 12) இது சென்னை நகரத்திலிருக்கும் சிறந்த திருப்பதி. சென்னைப் பெருநகரில் திவ்வியப் பிரபந்தம் பெற்ற பதி இஃது ஒன்றே. பார்த்தனுக்குத் தேரோட்டிய பெருமாள். நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம், திருமழிசையாழ்வார் தாளால் உலகம் அளந்த அசைவேகொல்? வாளா கிடந்துஅருளும் வாய்திறவான்-நீள்விதம் வந்துஅலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத்து அணை. திருமங்கையாழ்வார் மீன்அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென்று இழிந்த கான்அமர் வேழம் கைஎடுத்து அலறக் கராஅதன் காலினைக் கதுவ,