பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 திருத்தலப்பயணம் ஆனையின் துயரம் திரப்புள் ஊர்ந்து. சென்றுநின்று ஆழிதொட் டானை, தேன்அமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. பேயாழ்வார் வந்துஉகைத்த வெண்திரைகள் செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும் அணிவிளக்காம்-எந்தை ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன் திருவல்லிக் கேணியான் சென்று. 95. கடிகை (கடிகாசலம்-சோளசிங்கபுரம்) யோகநரசிம்மர்-அமுதவல்லி வழிபட்டநாள் : 8-2-58, 25-1-66 1. திருமங்கையாழ்வார் 3, 2. பேயாழ்வார் 1: (ஆக 4) சென்னைக்கு வடமேற்கே 40 மைல் தொலைவிலுள்ள இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 8 கல் தொலைவு. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம், 320 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது நரசிம்மமூர்த்தியும், 200 அடி உயரமுள்ள மற்றொரு குன்றின் மீது ஆஞ்சனேய மூர்த்தியும் இருக்கின்றன. ஊருக்குள் இருக்கும் சந்நிதியில் ஆதிகேசவப் பெருமாளும், உற்சவரும் எழுந்தருளியிருக்கின்றனர். கீழ்க் கோவிலுக்கும். மலை அடிவாரத்திற்கும் சுமார் 2 மைல் தொலைவு. திருமங்கையாழ்வார் மிக்கானை. மறையாய் விரிந்த விளக்கை.என்னுள் புக்கானை, புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை, தக்கானை. கடிகைத் தடங்குன்றின் மிசைஇருந்த அக்காரக் கனியை அடைந்துஉய்ந்து போனேனே. பேயாழ்வார் (விண்ணகரம் தலப்பாடல் பார்க்க)