பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. திருவேங்கடம் (திருப்பதி) திருவேங்கடத்தான்-அலர்மேல்மங்கைத்தாயார் வழிபட்டநாள் : 18-11-61, 30-1-86. 1. பெரியாழ்வார் 7 2. ஆண்டான் 18 குலசேகராழ்வார் 11: 4. திருமழிசையாழ்வார் 15, 5. திருப்பாணாழ்வார் És 6. திருமங்கையாழ்வர் 62; 7. பொய்கையாழ்வார் 10: 8. பூதத்தாழ்வார் 9, 9. பேயாழ்வார் 19: 10. நம்மாழ்வார் 52. (ஆக. 203) இரயில் நிலையம். ரேணிகுண்டா இரயில் நிலையத்திற்கு மேற்கே 6 கல் தொலைவு. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம், திருப்பதிமலை அடிவாரத்திலிருந்து சினிவாசப் பெருமான் நிற்கின்ற மலை உச்சி, நடந்து சென்றால் 8 கல் அளவு. கார்ச் சாலை 11 கல் அளவு, நடைபாதை பழமையானது. கார்ச் சாலை, பின்னாளில் தோன்றியது. இன்று இரண்டும் பயன்படுகின்றன. இந்த மலை உச்சியில் நிற்கும் வேங்கடநாதனை விடச் செல்வத்திற் சிறந்த கடவுள் உலகில் எங்குமே இல்லை. ஆண்டு தோறும் கோடிக்கு மேற்பட்ட வருமானம் வருகிறது. அடியார்கள் தொகையும் பெருகிக்கொண்டே போகின்றது. எந்த நேரத்திலும் திருவேங்கடத்தானைக் கண்டு வணங்குதல் எளிதன்று. திருவேங்கடத்தானுக்கு இருக்கின்ற சொத்தும், வைர அணிகளும். தங்க, வெள்ளி வாகனங்களும் வேறு எந்தக் கடவுளுக்கும் இல்லை.