பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 5 உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம் பெருமானைப் பெற்றாம் அன்றே. மணிவாசகர் பொய் ஆய செல்வத்தே புக்கு.அழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா'என் ஆர்உயிரே! அம்பலவா! என்று அவன்தன் செய்யார் மலர் அடிக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ! (திருவாசகம்} நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்து:நெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித் திருத்தம் பயிலும் சுனைகுடைந்து ஆடிச் சிலம்புஎதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோ?வல்லி மெல்லியல் வாடியதே. (திருக்கோவையார்) திருமாளிகைத்தேவர் கருவளர் மேகத்து அகடுதோய் மகுடக் கனகமா எளிகைகலந்து எங்கும் பெருவளர் முத்தி நான்மறைத் தொழில்சால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவதி நிதியம் திரண்டசிற் றம்பலக் கூத்தா! உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்அடிக் கிழதுஎன் உயிரே. (திருவிசைப்பா)