பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 379 திருமலைத் தேவஸ்தானத்தார் கல்லூரி முதலிய எண்ணற்ற அறச் செயல்களைச் செய்து வருகின்றனர்:செல்வத்துப் பயன் ஈதலே என்பதை உணர்ந்து, தேவைப்படும் பல கோயில்களுக்குப் பொருள் உதவுகின்றனர். மலை அடிவாரத்தில் ஓர் அருவி விழுகின்றது. அந்த அருவிக்குக் கபில தீர்த்தம் என்று பெயர். அருவிக்கரையில் கயிலேசுவரன் என்ற பெயரையுடைய சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. பெரியாழ்வர் மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு. கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்புத் துகில்அவை கிறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய்! பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்! ஆண்டான் மதயானை போல்எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தைஎன்னே? கதிஎன்றம் தான்.ஆவான் கருதாது.ஓர் பெண்கொடியை வதைசெய்தான்! என்னும் சொல் வையகத்தார். மதியாரே. குலசேகராழ்வார் உம்பர் உலகுஆண்டு ஒருகுடைக்கிழி உருப்பசிதன் அம்பொன் கலைஅல்குல் பெற்றாலும் ஆதரியேன் செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே