பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 திருத்தலப்பயணம் திருமழிசையாழ்வார் வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினைநோய் திர்ப்பதுவும்-வேங்கடமே தானவரை வீழத்தன் ஆழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை. திருப்பாணாழ்வார் மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள் சந்தி செய்யநின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல்நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்த தோர்.எழில் உந்தி மேலது.அன் றோஅடி ய்ேன் உள்ளத்து இன் உயிரே. திருமங்கையாழ்வார் வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே! வேங்கடமே! என்கின் றாளால், மருவாளால் என்குடங்கால் வாள்நெடுங்கண் துயில்மறந்தாள் வண்டுஆர் கொண்டல் உருவாளன் ; வானவர்தம் உயிராளன்: ஒலிதிரைநீர்ப் பெளவம் கொண்ட திருவாளன். என்மகளைச் செய்தனகள் எங்ங்ணம்நான் சிந்திக் கேனே! பொய்கையாழ்வார் எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, வழுவா வகைநினைந்து வைகல்-தொழுவார் வினைச்சுடரை நந்துவசிக்கும் வேங்கடமே. வானோர் மனச்சுடரைத் துண்டும் மலை. பூதத்தாழ்வார் பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று இருகண் இளமூங்கில் வாங்கி-அருகுஇருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர். வான்கலந்த வண்ணன் வரை.