பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 333 லட்சுமி நரசிம்மம் (கீழ் அகோபிலம்) சத்திராந்த நரசிம்மம் யோக நரசிம்மம் காரங்கி நரசிம்மம் உக்கிர நரசிம்மம் (மேல் அகோபிலம்) பார்க்கவ நரசிம்மம் பர்முலிதி நரசிம்மம் வராக நரசிம்மம் பிரகலாத நரசிம்மம். இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். திருமங்கையாழ்வார் மென்ற பேழ்வாய் வாள்.எயிற்றுஓர் கோளரி யாய் அவுணன், பொன்ற ஆகம் வள்.உகிரால் போழ்ந்த புனிதன் இடம் நின்ற செந்தி மொண்டுதுறை நீள்விசும்பு ஊடுஇரிய, சென்று காண்டற்கு அரியகோயில் சிங்கவேள் குன்றமே. 98. அயோத்தி சக்கரவர்த்தித்திருமகன்-சீதாப்பிராட்டி வழிபட்டநாள் : 21-2-61 1. பெரியாழ்வார் 6, 2. குலசேகராழ்வார் 4 3. தொண்டரடிப்பொடியாழ்வார் 1, 4. திருமங்கையாழ்வார் 1: 5. நம்மாழ்வார் 1. (ஆக 13) காசிக்கு வடமேற்கே 125 கல் தொலைவிலும், பிரயாகைக்கு வடக்கே 99 கல் தொலைவிலும் அயோத்தி இருக்கிறது. பைசாபாத் இரயில் நிலையத்திற்கு வடக்கே 6 கல் தொலைவு. இந்நகரத்தில் பரந்த சரயு நதி ஓடுகிறது. "சரயு என்பது தாய்முலை அன்னது" என்பார் கம்பர் பெருமான்.