பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 திருத்தலப்பயணம் செவ்விய மதுரம் சேர்ந்ததற் பொருளில் சிரிய கூரிய திம்சொல் வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பில் எவ்வுல கத்தோர் யாவரும் தவம்செய்து ஏறுவான் ஆதரிக் கின்ற அவ்வுல கத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்திமா நகரம். தேவர்கள் எல்லாம் அயோத்தியில் பிறக்க விரும்புவார்கள் என்பர் கம்பர். ஆம் இராமபிரான் பிறந்த நகரல்லவா? அயோத்தி நகரத்தையும், அந்நகரத்தில் ஒடும் சரயு ஆற்றையும் கண்டவுடன் இராமபிரானின் சிறப்பு முழுதும் நினைவுக்கு வந்து மெய்ம்மறந்து விடுவோம். அயோத்திக் கோயிலை மேலே குறித்த ஐந்து ஆழ்வார்கள் பாடியிருக்கின்றார்கள். மேற்கே திருமுக மண்டலம் நின்ற திருக்கோலம். இக்கோவிலில் அனுமன் சந்நிதி ஒன்று இருக்கின்றது. இங்கே காண வேண்டிய சிறந்த இடங்கள். இராம பிரான் பிறந்த இடம். அயோத்தி பீடம். இரத்தின மண்டபம், தங்க மண்டபம், தர்மஸ்தானம். அக்கினி குண்டம். உத்தியானவனம். அகத்திய ஆசிரமம். வசிஷ்ட ஸ்தானம். அனுமந்த குண்டம். சுசேந்திர குண்டம். சிதாகூபம். சக்கர திர்த்தம்.