பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 385 14. ருனவிமோசன திர்த்தம். 15. வான்மீகி திர்த்தம். 16. நாராயண்குண்டம். 17. தங்க இராமர். அயோத்தியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்குப் பெரிய சத்திரம் இருக்கின்றது. மற்றும் அறச் சாலைகள் நிறைய இருக்கின்றன. அயோத்திக்கு அண்மையில் சுமார் 10 கல் அளவில் இராமபிரானின் பாதுகையை வைத்துப் பரதன் அரசாண்ட நந்திக் கிராமம் இருக்கிறது. பெரியாழ்வார் மைத்தகுமா மலர்க்குழலாய்! வைதேவி! விண்ணப்பம். ஒத்தபுகழ் வானரக்கோன் உடன்இருந்து நினைத்தேட அத்தகுசிர் அயோத்தியர்கோன் அடையாளம் இவைமொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈது.அவன் கைம் மோதிரமே. குலசேகராழ்வார் அங்கண்நெடு மதிள்புடைசூழ் அயோத்தி என்னும் அணிநகரத்து உலகு.அனைத்தும் விளக்கும்சோதி வெங்கதிரோன் குலத்துக்குஓர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை, செங்கண்நெடுங் கருமுகிலை. இராமன் தன்னை. தில்லைநகர்த் திருச்சித்ர கூடம் தன்னுள் எங்கள்தனி முதல்வனைஎம் பெருமான் தன்னை, என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே!