பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 திருத்தலப்பயணம் கருஆர்த்தேவர் கண்பனி அரும்பக் கைகள்மொட் டித்துனன் களைகனே ஒலம்என்று ஒலிட்டு. என்டெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில், பண்பல தெளிதேன் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைது.ழ் மொழுப்பில் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (திருவிசைப்பா) பூந்துருத்திநம்பி காடநம்பி அல்லிஅம் பூம்பழனத்து ஆமூர்நா வுக்குஅரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்தில்லைக் கொல்ஐ விடைஏறி, கூத்துஆடு அரங்காகச் செல்வம் நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. (திருவிசைப்பா) கண்டராதித்தர் மானைப் புரையும் மடமென் னோக்கி மாமலை யாளோடும் ஆன்அஞ்சு ஆடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன் தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை.ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? (திருவிசைப்பா) வேணாட்டடிகள் "பாவார்ந்த தமிழ்மாலை பத்தர்அடித் தொண்டன்எடுத்து ஒவாதே அழைக்கின்றான்" என்றுஅருளி நன்றுமிகத் தேவே!தென் திருத்தில்லைக் கூத்தாடீ நாய்அடியேன். சாவாயும் நினைக்கண்டால் இனிஉனக்குத் தடுப்பரிதே' (திருவிசைப்பா)