பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 திருத்தலப்பயணம் செம்பினால் இயன்ற பாவையை, பாவீ! தழுவு'என மொழிவதற்கு அஞ்சி, நம்பனே! வந்துஉன் திருவடி அடைந்தேன் நைமிசா ரணியத்துள் எந்தாய்: 100. சாளக்கிராமம் பூரீ மூர்த்திப்பெருமாள்-பூரீ தேவிநாச்சியார் வழிபட்டநாள்: 1. பெரியாழ்வார் 2, 2. திருமங்கையாழ்வார் 10 ஆக 12.) இது நேபாள நாட்டில் இருக்கிறது. நேபாள நாட்டின் தலைநகராகிய காட்மாண்டுவுக்கு, பாட்னாவிலிருந்தும், கல்கத்தாவினின்றும் விமானத்தில் செல்லலாம். காட்மாண்டு நகரத்திலிருந்து இத்தலம் 80 கல் தொலைவு. நடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நேபாளத்திலுள்ள காட்மாண்டு நகரம் சென்று. அங்குள்ள பசுபதிநாதர் என்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானை வணங்கிய ராய.சொ. எவ்வளவோ முயன்றும் சாளக் கிராமம் என்ற இத்தலத்திற்கு நடந்து செல்ல முடியாமையால் செல்லவில்லை. நின்ற திருக் கோலம் வடக்கே திருமுக மண்டலம். சாளக்கிராமம் என்ற நீரில் உலவுகின்ற பொருள் இங்கு கிடைப்பதாகச் சொல்லப் பெறுகின்றது. பெரியாழ்வார் பாலைக் கறந்து,அடுப்புஏற வைத்துப் பல்வளை யாள்என் மகள் இருப்ப, மேலைஅ கத்தே நெருப்பு வேண்டிச் சென்று.இறைப் பொழுதுஅங்கே பேசிநின்றேன்.