பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 389 சாளக்கி ராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டு போந்துநின்றான். ஆலைக்க ரும்பின் மொழிஅ னைய அசோதைநங் காய்!உன் மகனைக்கூவாய்! திருமங்கையாழ்வார் கலையும். கரியும், பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் சிலையும், கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து. மலைகொண்டு அலைநீர் அணைகட்டி. மதிள்நீர் இலங்கை வாள்.அரக்கர் தலைவன் தலைபத்து அறுத்துஉகந்தாள் சாளக் கிராமம் அடைநெஞ்சே! 101. வதரியாச்சிரமம் (பதரிகாச்ரமம்) பதரிநாராயணன்-அரவிந்தநாயகி வழிபட்டநாள் : 1. பெரியாழ்வார் 1 2. திருமங்கையாழ்வார் 21; (ஆக. 22) அரித்துவாரத்திலிருந்து ரிஷிகேசம் 15 கல் அங்கிருந்து தேவப்பிரயாகை 44 கல். அதுவரைச் சாலை இருக்கிறது. பஸ்ஸிலோ காரிலோசெல்லலாம். தேவப்பிரயாகையிலிருந்து 124 மைல். பல மைல் நடந்து செல்ல வேண்டும். இது இமயமலையிலுள்ள தலங்களில் ஒன்று. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.