பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 391 103. திருப்பிரிதி (ஜோஷிமடம்) பரமபுருடன்-பரிமளவல்லி வழிபட்டநாள் : திருமங்கையாழ்வார் 10 தேவப் பிரயாகையிலிருந்து 108 மைல். இது இமய மலைத் தலங்களுள் ஒன்று. கிடந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம், திருமங்கையாழ்வார் ஒதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல் ஏதம் இன்றிநின்று அருளும்நம் பெருந்தகை இருந்தநல் இமயத்து, தாது மல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற தழல்புரை எழில்நோக்கி, பேதை வண்டுகள் எரிஎன வெருவரு பிருதிசென்று அடைநெஞ்சே! 104. துவாரகை கலியாணநாராயணன்-கலியாணநாச்சியார் வழிபட்டநாள் : 1. பெரியாழ்வார் 5, 2. ஆண்டாள் 4, 3. திருமழிசையாழ்வார் 1, 4. திருமங்கையாழ்வார் 2: 5. நம்மாழ்வார் 1. (ஆக 13) பம்பாயிலிருந்து கடல் மார்க்கம் 180 கல். இருப்புப் பாதை மார்க்கம் 550 கல். விமானத் திலும் செல்லலாம்.