பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 திருத்தலப்பயணம் இருந்த திருக்கோலம் மேற்கே திருமுக மண்டலம். இது கண்ணபிரான் வாழ்ந்த சிறப்புடைய பதி. வட மதுரையிலிருந்து கண்ணன் அதைவிட்டுத் துவாரகையை அடைந்தான் என்ப. பெரியாழ்வார் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும் மதில்நா யகர்ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில், புதுநாள் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான் பொதுநா யகம்பாவித்து இறுமாந்து பொன்சாய்க்கும் புனல்அ ரங்கமே ஆண்டாள் கூட்டில் இருந்துகிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா!' என்றுஅழைக்கும் ஊட்டக் கொடாது செறுப்பன் ஆகில் 'உலகுஅளந் தான்'என்று உயரக்கூவும்: நாட்டில் தலைப்பழி எய்திஉங்கள் நன்மை இழந்து தலையிடாதே. சூட்டுஉயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவரா பதிக்குஎன்னை உய்த்திடுமின். திருமழிசையாழ்வார் சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரைக்கோ னாய்நின்ற-மாயன்.அன்று ஒதிய வாக்குஅதனைக் கல்லார். உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானம் இல்.