பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 393 திருமங்கையாழ்வார் கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் திமூட்டி விட்டானை, மெய்யம் அமர்ந்த பெருமானை. மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய், வண்துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே. நம்மாழ்வார் அன்னைஎன் செய்யில்என்ஊர்என் சொல்லில்என்தோழிமீர்! என்னை இனிஉமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்; முன்னை அமரர் முதல்வன் வண்துவ ராபதி மன்னன். மணிவண் ணன்வாசு தேவன் வலையுளே. 105. வடமதுரை கோவர்த்தன.ஈசன்-சத்தியபாமை வழிபட்டநாள் : 1. பெரியாழ்வார் 4, 2. ஆண்டாள் 6: 3. தொண்டரடிப்பொடியாழ்வார் 1, 4.திருமங்கையாழ்வார் 4 5. நம்மாழ்வார் 10. (ஆக. 25) தில்லிக்குத் தெற்கே 80 கல் தொலைவிலுள்ள மதுராஇரயில் நிலையத்திற்கு அண்மையில் யமுனை ஆற்றின் கரையில் இத்தலம் இருக்கின்றது. நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். கண்ணன் பிறந்து, வளர்ந்து ஆடல் புரிந்த திருத்தலம் இது. இத்தலத்திற்கு 6 மைலில் பிருந்தாவனமும், கிழக்கே 4 மைலில் கோகுலமும், தெற்கே 9 மைலில் கோவர்த்தன கிரியும் இருக்கின்றன.