பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 திருத்தலப்பயணம் பெரியாழ்வார் நான்ஏதும் உன்மாயம் ஒன்றும்அறியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு. இந்த ஊனே புகேஎன்று ஒதும் போதுஅங்கு ஏதும்தான் உன்னை நினைக்க மாட்டேன்; வான்ஏய் வானவர் தங்கள் ஈசா! மதுரைப் பிறந்தமா மாய னே.என் ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளி யானே! ஆண்டாள் மாயனை. மன்னும் வடமதுரை மைந்தனை. தூய பெருநீர் யமுனைத் துறைவனை. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனை. துயோமாய் வந்துநாம் தூமலர்கள் தூய்த்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தியினில் தூசாகும் செப்பேல்ஓர் எம்பாவாய். தொண்டரடிப்பொடியாழ்வார் வளவுஎழும் தவள மாட மதுரைமா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை, அரங்க மாலை, துவளத்தொண்டு ஆய தொல்சீர்த் தொண்டர் அடிப்பொ டீசொல் இளையபுன் கவிதை யேலும் எம்பிராற்கு இனிய வாறே!