பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 திருத்தலப்பயணம் ஆண்டாள் அல்லல் விளைத்த பெருமானை. ஆயர் பாடிக்கு அணிவிளக்கை. வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை, வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிகவிரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே. திருமங்கையாழ்வார் பூண்முலைமேல் சாந்து அணியாள் பொருகயல்கண் மைஎழுதாள் பூவை பேனாள் ஏண்அறியாள் எத்தனையும். 'எம்பெருமான் திருஅரங்கம் எங்கே?' என்னும நாள்மலராள் நாயகனாய் நாம்அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி ஆண்மகனாய் என்மகளைச் செய்தனகள் அம்மனைமீர்! அறிகி லேன்ே. 107. திருப்பாற்கடல் பாற்கடல்நாதன்-கடல்மகள் வழிபட்டதாள் : 1.பெரியாழ்வார் 5, 2. ஆண்டாள் 3: 3. குலசேகராழ்வார் 2, 4 திருமழிசையாழ்வார் 13: 5. தொண்டரடிப்பொடியாழ்வார் 1, 6. திருமங்கையாழ்வார் 11, 7. பொய்கையாழ்வார் 1, 8. பூதத்தாழ்வார் 2, 9. பேயாழ்வார் 4 10. நம்மாழ்வார் 9, (ஆக 51) இது யோகிகளும், முனிவர்களும், அமரர்களும் இருந்த இடத்திலேயே இருந்து, எண்ணி வழிபாடு செய்யும் இடம்.