பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாடு 397 பெரியாழ்வார் பைஅர வின்அணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி. உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்.நான் முகனை, வைய மனிசரைப் பொய்என்று எண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்: ஐய! இனி.என்னைக் காக்கவேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளி யானே! ஆண்டாள் வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ? பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்உண்ணோம் பால்உண்ணோம் நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்: செய்யா தனசெய்யோம் திக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி, உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். குலசேகராழ்வார் ஒண்பவள வேலை உலவுதண் பாற்கடலுள் கண்துயிலும் மாயோன் கழல்இணைகள் காண்பதற்கு, பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து. செண்பகமாய் நிற்கும் திருஉடையேன் ஆவேனே. திருமழிசையாழ்வார் பாலிற் கிடந்ததுவும் பண்டு.அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆர்.அறிவார்-ஞாலத்து ஒருபொருளை. வானவர்தம் மெய்ப்பொருளை, ஒப்பில் அருபொருளை யான்அறிந்த வாறு? தொண்டரடிப்பொடியாழ்வார் இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்.