பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 திருத்தலப்பயணம் கனிஇருந்து அனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனிஅரும்பு உதிரும் ஆலோ என்செய்கேன் பாவி யேனே! திருமங்கையாழ்வார் ஊனிடைச் சுவர்வைத்து என்புதூண் நாட்டி, உரோமம்மேய்ந்து ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை பிரியும்போது உன்தன் சரணமே சரணம்என்று இருந்தேன்; தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே! திரைகொள்மா நெடுங்கடல் கிடந்தாய்! நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன். நைமிசா ரணியத்துள் எந்தாய்! பொய்கையாழ்வார் - உரைமேற்கொண்டு என்உள்ளம் ஒவாது.எப் போதும் வரைமேல் மரகதமே போல.-திரைமேல் கிடந்தானைக் கிண்டானை, கேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தி எழும். பூதத்தாழ்வார் பரசு நறுமலரால் பாற்கடலான் பாதம் புரிவார் புகழ்பெறுவர் போலாம்-புரிவார்கள் தொல்அமரர் கேள்வித் துலங்குஒளிசேர் தோற்றத்து நல்அமரர் கோமான் நகர். பேயாழ்வார் நன்குஒது நால்வேதத்து உள்ளான். நறவிரியும் பொங்கோது அருவிப் புனல்வண்ணன்-சங்குஒதப் பாற்கடலான் பாம்பணையின் மேலான்:பயின்றுஉரைப்பார் நூற்கடலான் நுண்அறிவி னான். நம்மாழ்வார் பாம்பணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும், காம்பணைதோள் பின்னைக்கா ஏறுடன்ஏழ் செற்றதுவும். தேம்பனைய சோலை மராமரம்ஏழ் எய்ததுவும். பூம்பிணைய தண்துழாய்ப் பொன்முடிஅம் போர்ஏறே.