பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருமிதுயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன், மாதவன். வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்றுஏலோர் எம்பாவாய். திருமழிசையாழ்வார் ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை, ஆன்றேன் அமரர்க்கு அமராமை - ஆன்றேன் கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை இடநாடு காணஇனி. திருப்பாணாழ்வார் அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன், விண்ணவர் கோன்.விரை ஆர்பொழில் வேங்கடவன் நிமலன், நின்மலன். நீதி வானவன். நீள்மதிள் அரங்கத்து அம்மான்.திருக் கமல பாதம்வந்துஎன் கண்ணின் உள்ளன. ஒக்கின்றதே. திருமங்கையாழ்வார் தொண்டெலாம் பரவசி நின்னைத் தொழுதுஅடி பணியுமாறு கண்டு.தான் கவலை திர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்! அண்டமாய் எண்தி சைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம் சோதி! நின்னையே பரவு வேனே. பொய்கையாழ்வார் உணர்வார்.ஆர் உன்பெருமை? ஊழிதோறு ஊழி உணர்வார்.ஆர் உன்உருவம் தன்னை?-உணர்வார்.ஆர் விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப் பண்ணகத்தாய்! நீகிடந்த பால்?