பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப்பயணம் & திருமூலர் காணிக்கக் கூத்தனை. வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை. ஆணிப்பொற் கூத்தனை யார் உரைப் பாரே. (திருமந்திரம்) காரைக்கால் அம்மையார் அடிபேரில் பாதாளம் பேரும் அடிக்கண் முடிபேரில் மாமுகடு பேரும்-கடகம் மறிந்து ஆடு கைபேரில் வான்திசைகள் பேரும் அறிந்து ஆடும் ஆற்றாது அரங்கு. (பதினொராம் திருமுறை) ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும் கோடுகின்றார். மூப்பும் குறுகிற்று-நாடுகின்ற நல்அச்சுஇற்று அம்பலமே நண்ணாமுன் நல்நெஞ்சே! தில்லைச்சிற் றம்பலமே சேர். (பதினொராம் திருமுறை) சேரமான் பெருமாள் நாயனார் ஆவன யாரே அழிக்கவல் லார்?.அமை யாஉலகில் போவன யாரேபொதியகிற் பார்?புரம் மூன்றுஎரித்த தேவனை. தில்லைச் சிவனைத் திருந்துஅடி கைதொழுது திவினை யேன்.இழந் தேன்.கலை யோடு செறிவளையே. (பதினொராம் திருமுறை) பட்டினத்துப் பிள்ளையார் நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்து தாயனைய னாய்அருளும் தம்பிரான்.-துரயவிரை மென்துழாய் மாலொடுஅயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மனி. (பதினொராம் திருமுறை)