பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு o நம்பியாண்டார் நம்பி நண்ணிய திவினை நாசம் செலுத்தி, நமன்-உலகத்து எண்ணினை நீக்கி, இமையோர் உலகத்து இருக்கல்உற்றீர்! பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக் கண் இணை ஆர்தரக் கண்டு.கை ஆரத் தொழுமின்களே. (பதினொராம் திருமுறை) சேக்கிழார் என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்.அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம். (பெரிய புராணம்) வில்லிபுத்துனர் ஆழ்வார் இன்னம்பல பலயோனியில் எய்தாநெறி பெறவே. முன்னம்பலர் அடிதேடவும் முடிதேடவும் எட்டா அன்னம்பல பயில்வார்புனல் அணிதில்லையுள் ஆடும் பொன்னம்பல நாதன்கழல் பொற்போடு பணிந்தான். (பாரதம்) பரஞ்சோதி முனிவர் உண்மை,அறிவு ஆனந்த உருவாகி எவ்உயிர்க்கும் உயிராய், நீரின் தண்மை.அனல் வெம்மைஎனத் தனை அகலாது இருந்து.சரா சரங்கள் ஈன்ற பெண்மைஉரு ஆகியதன் ஆனந்தக் கொடி.மகிழ்ச்சி பெருக, யார்க்கும் அண்மையதாய் அம்பலத்துள் ஆடிஅருள் பேரொளியை அகத்துள் வைப்போம். (திருவிளையாடல்)