பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப்பயணம் சிவஞான யோகிகள் சங்குஏந்தும் மலர்க்குடங்கைப் புத்தேளும், மறைக்கோவும், தழல்கால் சூலம் அங்குஏந்தும் அம்மானும் தத்தமது தொழில்தலைநின்று ஆற்றச் செய்துஓர் பங்குஏந்தும் பெருமாட்டி விழிகளிப்ப இருமுனிவர் பணிந்து போற்றக் கொங்குஏந்தும் மணிமன்றுள் குனித்தருளும் பெருவாழ்வைக் குறித்து வாழ்வாம். (காஞ்சிப் புராணம்) தாயுமானார் சைவ சமய மேசமயம் சமயா திதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந்து உழலும் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்திரே! இராமலிங்க சுவாமிகள் அருள்ளலாம் அளித்த அம்பலத்து அமுதை, அருட்பெரும் சோதியை, அரசை, மரும்ளலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை. வள்ளலை, மானிக்க மணியை, பொருள்எலாம் கொடுத்துஎன் புந்தியில் கலந்த புண்ணிய நிதியைமெய்ப் பொருளை, தெருள்ளலாம் வல்ல சித்தை.மெய்ஞ் ஞான திபத்தைக் கண்டுகொண் டேனே.