பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 திருத்தலப்பயணம் பட்டிச் சரம்உறை பரமா போற்றி பழையா றை,வட தளியாய் போற்றி வலஞ்சுழி மேவிய வரதா போற்றி குடமூக்கு அமர்கும் பேசா போற்றி கிழ்க்கோட் டத்துளங் கூத்தா போற்றி குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி நாகேச் சரம்வாழ் நாதா போற்றி *இடைமருது உறையும் எந்தாய் போற்றி தென்குரங்கு ஆடு துறையாய் போற்றி நீலக் குடிஉறை நிருத்தா போற்றி வைகல் மாடக் கோயிலாய் போற்றி நல்லம் நடம்பயில் நாதா போற்றி கோழம் பத்துஉறை கோவே போற்றி ஆவடு தண்துறை அமரா போற்றி துருத்தி ஈசlநின் துணையடி போற்றி அழுந்துளர் ஆளும் அரசே போற்றி மயிலா டுந்துறை மணியே போற்றி திருவிள நகர்உறை திருவே போற்றி பரியல்வீ ரட்டப் பரமா போற்றி செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி நனிபள்ளி வளரும் நம்பா போற்றி வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி தலைச்சங் காடுஅமர் தத்துவ போற்றி ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி கடவூர்க் காலவீ ரட்டா போற்றி கடவூர் மயானக் கடவுளே போற்றி வேட்டக் குடியின் மேயோய் போற்றி திருத்தெளிச் சேரிச் சிவனே போற்றி தரும புரம்வளர் தாயே போற்றி நள்ளாறு உடைய நாதா போற்றி 90 95 100 105 110 115