பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு iÁ 2. திருவேட்களம் பாசுபதேசுவரர்-நல்லநாயகி சம்பந்தர்: .ே அப்பர்: 1. வழிபட்டநாள்: 4-7-57; 6-1-66 சிதம்பரத்திற்கு அணித்தே இரண்டு கல், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை ஒட்டி இருக்கின்றது. பார்த்தனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதம் ஏந்திய புறப்பாட்டுத் திருவுருவமும், பார்த்தன் உருவமும் கோயிலில் இருக்கின்றன. சம்பந்தர் ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார். அமுதம் அமரர்க்குஅருளி, சூழ்தரு பரம்பரை ஆர்த்துச் சூலமோடு ஒண்மழு ஏந்தி. தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலேததும்ப, வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னக ராரே. அல்லல் இல்லை; அருவினை தான்இல்லை; மல்கு வெண்பிறை சூடு மணாளனார். செல்வ னார்.திரு வேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே.