பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம் திவ்வியப்பிரபந்தத் தல வணக்கம் 'தமிழ்க்கடல்' 'சிவமணி' சாய சொ. இயற்றியது திருவரங் கத்துஉறை தேவா போற்றி உறையூர் நின்ற ஒருவ போற்றி தஞ்சை மாமணிக் கோயிலாய் போற்றி அன்பில் துயின்ற அறமே போற்றி உத்தமர் கோயில் உகந்தாய் போற்றி வெள்ளறை மேவிய விண்டுவே போற்றி புள்ளம் பூதங் குடியாய் போற்றி திருப்பேர் நகர்க்குடத் திருவே போற்றி ஆதனுர் ஆண்ட ஆதி போற்றி தேர்அழுந் துர்தில், செழுஞ்சுடர் போற்றி சிறுபுலி யூர்சேர் சிரோய் போற்றி சேறையுள் நின்ற செங்கண்மால் போற்றி சங்கநாள் மதியம் சார்ந்தாய் போற்றி குடந்தைக் கிடந்த கோமான் போற்றி கண்டியூர் நின்ற கண்ணே போற்றி ஒப்பிலி அப்பநின் ஒண்தாள் போற்றி கணபுரம் விரும்பிய கண்மணி போற்றி ஆலியும் நகரியும் அமர்ந்தாய் போற்றி நாகை அழகிய நல்மணி போற்றி நறையூர் நின்ற நம்பி போற்றி நாதன் கோயில் நல்லாய் போற்றி இந்தளூர் மேவிய அந்தண போற்றி திருச்சித்ர கூடச் செல்வா போற்றி சிர்காழி விண்ணகர்ச் செம்மால் போற்றி கூடலூர் உறையும் கோவிந்த போற்றி