பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருத்தலப்பயணம் 3. திருநெல்வாயில் (சிவபுரி) உச்சிகாகேகார்-கனகாம்பிகை 莎 兵 சம்பந்தர்: 1. வழிபட்டநாள்: 4-7-57; 4-1-66, சிதம்பரத்திலிருந்து மூன்று கல், அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திலிருந்து ஒன்றரைக் கல். சம்பந்தர் விருத்த னாகி,வெண் ணிறு பூசிய கருத்த னார்.கன லாட்டு உகந்தவர். நிருத்த னார்.நெல் வாயில் மேவிய ஒருத்த னார்.எமது உச்சி யாரே. & 4. திருக்கழிப்பாலை பால்வண்ணநாதேசுரர்-வேதநாயகி சம்பந்தர்: 2 அப்பர்: 5 சுந்தரர்: 1. வழிபட்டநாள்: 4-7-57; 4-1-66. சிதம்பரத்திலிருந்து மூன்று கல்லும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒன்றரைக்கல் அளவிலும் உள்ள திருநெல்வாயில் என்னும் சிவபுரிக் கோயிலுக்கு மிக அண்மையிலிருக்கிறது. பாடல்காலத்திலிருந்த பழைய கோயில் சிதம்பரத்திற்குத் தென் கிழக்கில் ஏழு கல் துரத்தில் திருக்கழிப்பாலை என்ற இடத்தில் இருந்ததாகவும்.அக்கோயில் கொள்ளிட ஆற்றால் கொண்டு செல்லப்பட்டு விட்டதால் இங்கே நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.