பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 13 சம்பந்தர் முதிரும் சடையின் முடிமேல் விளங்கும் கதிர்வெண் பிறையாய்! கழிப்பா லையுளாய்! எதிர்கொள் மொழியால் இரந்துஏத் தும்அவர்க்கு அதிரும் வினையா யின.ஆ சறுமே. அப்பர் விண்ணப்ப வரிச்சா தரர்கள் ஏத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணும் ஆகிப் பண்ணப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி, பாசுபதன், தேச மூர்த்தி, கண்ணப்பன் கண்அப்பக் கண்டுஉகந்தார் கழிப்பாலை மேய கபாலப் பன்னார். வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போது நாமே. சுந்தரர் எங்கேனும் இருந்துஉன் அடியேன் உனை நினைந்தால் அங்கேவந்து என்னொடும் உடனாகி நின்றுஅருளி இங்கேஎன் வினையை அறுத்திட்டு எனை ஆளும் கங்காநா யகனே! கழிப்பாலை மேயானே. சேக்கிழார் மேவிய பணிகள் செய்து விளங்குதாள் வேட்க ளத்துச் சேஉயர் கொடியார் தம்மைச் சென்றுமுன் வணங்கிப் பாடிக் காவிஅம் கண்டர் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ. (பெரியபுராணம்)