பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼强 திருத்தலப்பயணம் 5. திருநல்லுனர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - சிவலோகத் தியாகேசர்-தங்கை உமையம்மை சம்பந்தர்: 1. வழிபட்டதாள் : 21-12-55: 5-1-66, சிதம்பரத்திற்குத் தெற்கே5 மைலில் உள்ள கொள்ளிடம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 3 கல். திருஞானசம்பந்தப்பெருமான் திருக்கல்யாணக்கோலத்துடன் மணப் பெண்ணைக் கைப்பிடித்து, திருநீலநக்க நாயனார். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், முருக நாயனார் முதலியோருடன் வைகாசி மூல நாளன்று சோதியிற் கலந்து வீடு பேறு அடைந்த திருத்தலம். இத்தலத்திற்குச் சிவக்கொழுந்து தேசிகர் தலபுராணம் பாடியுள்ளார். மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருவெண்ணிற்றுமை பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தம் பாடியுள்ளார். சம்பந்தர் அன்புறு சிந்தையர் ஆகி. அடியவர் நன்புறு நல்லுனர்ப் பெருமணம் மேவிநின்று. இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறு வார்.அல்லர்: தொண்டுசெய் வாரே. சேக்கிழார் தவ அரசு ஆள உங்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும் பவம்.அறுத்து ஆன வல்லார் பாதம்உள் ளத்துக் கொண்டு புவனங்கள் வாழ வந்தபூந்தராய் வேந்தர் போத்து சிவன் அமர்ந்து உறையும் நல்லூர்த் திருப்பெரு மனத்தைச் சேர்ந்தார்.