பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. § சோழநாடு 6. திருமயேந்திரப்பள்ளி (கோயிலடிப்பாளையம்) திருமேனியழகர்-வடிவாம்பிகை சம்பந்தர்: 1. வழிபட்டநாள்: 21-12-58; 5-1-66. இத் தலம் கொள்ளிடம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைலில் உள்ள நல்லூர்ப்பெருமணம் என்ற ஆச்சாள்புரத்திற்கு வட கிழக்கில் 4 மைலில் இருக்கிறது. மயேந்திரன் என்ற இந்திரன் வழிபட்டமையால் மயேந்திரப் பள்ளி என்னும் பெயர் பெற்றது என்ப. சம்பந்தர் வங்கம்ஆர் சேண்உயர் வருகுறி யால்மிகு சங்கம்ஆர் ஒலி.அகில் தருபுகை கமழ்தரும் மங்கைஓர் பங்கினன். மயேந்திரப் பள்ளியுள் எங்கள்தா யகன்.தனது இணையடி பணிமினே. 7. தென் திருமல்லைவாயில் முல்லைவனநாதர்-கோதையம்மை சம்பந்தர்: 1. வழிபட்டநாள்: 24-12-56; 15-10-65 சிர்காழிக்குக் கிழக்கில் 9 மைல், இத் தலம் கடற்கரையில் இருக்கின்றது. இத் தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் பாடல் இயற்கை வளம் கொழிக்கின்றது.