பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 திருத்தலப்பயணம் சம்பந்தர் கொம்டன்ன மின்னின் இடையாள்ஒர் கூறன். விடை நாளும்ஏறு குழகன். நம்பன்எம் அன்பன் மறைநாவன். வானின் மதிஏறு சென்னி அரன் ஊர். அம்பன்ன ஒண்கண் அவர் ஆடு அரங்கின் அணிகோ புரங்கள் அழகார் செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு திருமுல்லை வாயில் இதுவே. சேக்கிழார் மங்கை யர்க்குவாள் விழி இணை தோற்ற, மான் குலங்கள் எங்கும் மற்றவர் இடைக்குஇடை மலர்க்கொடி எங்கும்: அங்கண் "முல்லையின் தெய்வம்" என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும் சிவன்மகிழ் திருமுல்லை வாயில். 8. திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை) சுந்தரேசுவரர்-அழகுவனமுலையம்மை சம்பந்தர்: 1 வழிபட்டநாள்: 17-8-57; 19-10-65. தென் திருமுல்லை வாயிலுக்குத் தென்மேற்கில் 3 கல் அளவு, உப்பனாறு தாண்டுதல் வேண்டும். சாயா வனத்துக்கு வடக்கே 4 மைல், திருவெண்காட்டிற்கு வடகிழக்கில் 3 மைல். சம்பந்தர் வானிடை வாள்மதி மாடம் திண்ட மருங்கே கடல்ஒதம் கானிடை நீழலில் கண்டல் வாழும் கழிதழ் கலிக்காமூர் ஆனிடை ஐந்து உகந்து ஆடி னானை, அமரர் தொழுது ஏத்த நானடை வாம்வணம் அன்பு தந்த நலமே நினைவோமே.