பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு 17 9. திருச்சாய்க்காடு (சாயாவனம்} சாயாவனேசுரர்-குயிலினும் நன்மொழியம்மை சம்பந்தர் : : அப்பர் : 2 வழிபட்டநாள் ; 7-8-57; 16-19-85. சீர்காழிக்குத் தென்கிழக்கில்9 மைல், திருவெண்காட்டிலிருந்து 2 மைல். காவிரிப்பூம் பட்டினத்திற்கு முன்னே மைல். இங்கு இயற்பகை நாயனார், அவர் மனைவி. இவர்களின் எழுந்தருளும் படிவங்கள் இருக்கின்றன. இயற்பகை நாயனார் சாய்க்காடு வரை தம் மனைவியை அழைத்துக்கொண்டு வந்து இறைவனோடு வழி அனுப்பியதாகப் பெரியபுராணம் பேசும். சம்பந்தர் நீநாளும் நன்நெஞ்சே! நினைகண்டாய்! யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டுளம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நா நாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வசினையே. அப்பர் குவப்பெரும் தடக்கை வேடன் கொடும்சிலை இறைச்சிப் பாரம் துவர்ப்பெரும் செருப்பால் நீக்கித் துணயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெரும் குருதி சோர ஒருகனை இடந்து அங்கு அப்ப தவப்பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.