பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 திருத்தலப்பயணம் ஐயடிகன் காடவர்கோன் நாயனார் அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாங்க் குஞ்சி வெளுத்துஉடலம் கோடாமுன்-நெஞ்சமே! போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. சேக்கிழார் இருவரால் அறிய ஒண்ணா ஒருவர்.பின் செல்லும் ஏழை பொருதிறல் வீரர் பின்பு போகமுன் போகும் போதில் அருமறை முனிவன் சாய்க்காடு அதன்மருங்கு அணையமே.வித் திருமலி தோளி னானை "மீள்"எனச் செப்பினானே. 10. திருப்பல்லவனிச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம்) பல்லவனேசுரர்-செளந்தரநாயகி. சம்பத்தர் : 2. வழிபட்ட நான்: 5-8-57; 16-10-65. சிர்காழிக்குத் தென்கிழக்கு 10 மைல், கோயிலுக்கு 2 மைலில் காவிரி கடலோடு கலக்கின்றது."பதியெழு அறியாப்பழங்குடி" என்றும், "பூம்புகார்" என்றும் சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்கள் இத் தலத்தைப் பேசும். பழைய காலத்தில் இது மிகப்பெரிய நகரமாக இருந்திருக்கிறது. புதை பொருள் ஆராய்ச்சியினர் நிலத்தைத் தோண்டிப் பல பொருள்களைக் கண்டெடுத்து வருகின்றனர். இயற்பகை நாயனாரும். பட்டினத்துப் பெரியாரும் பிறந்தருளியது. இத் தலத்திலேயே. கண்ணகி கோவலன் கதை தொடங்கியது இங்குத் தான்.