பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாடு io நாட்டுக் கோட்டை நகரத்தார் இவ்வூரில்தான் அந்த நாளில் வாழ்ந்ததாகக் கூறப் பெறுகின்றது. இத் தலம் பல்லவ மன்னன் வழிபாடு செய்தமையால் பல்லவனீச்சுரம் என்னும் பெயர் பெற்றது என்ப. சம்பந்தர் எண்ணார் எயில்கள் மூன்றும்சிறும் எந்தைபிரான் இமையோர் கண்ணாய் உலகம் காக்கநின்ற கண்ணுதல் நண்ணும்இடம் மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன்.அருந்தி, பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னிச்சுரமே. சேக்கிழார் சென்னி வெண்குடை நீடுஅந பாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ யம்தர இயல்பினில் அளித்து, பொன்னி நல்நதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதம்ஆக் குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நலம்சி றந்தது வளம்புகார் நகரம். 11. திருவெண்காடு வெண்காட்டு நாதர்-பிரமவித்தியா நாயகி சம்பந்தர் : 3: அப்பர் : 2 சுந்தரர் : 1. வழிபட்டநாள் : 31-1-57; 13-10-65 சிர்காழிக்குத் தென் கிழக்கில் 7 மைல், வைத்திசுவரன் கோயிலுக்குக் கிழக்கே 7 மைல். கோயில்பெரிது. அகோரமூர்த்தி சூலத்துடன் தெற்குமுகமாகப் பெரிய வடிவாக இருக்கின்றது.