பக்கம்:திருத்தலப் பயணம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4{} திருத்தலப்பயணம் சோம, சூரிய, அக்கினி என்ற மூன்று குளங்கள் கோயிலுக்குள் இருக்கின்றன. இதனை "வெண்காட்டு முக்குள நீர்" என ஞானசம்பந்தர் பாடல் கூறுகின்றது. சங்கமுகம் ஆடி, சாயா வனம்பார்த்து முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ? என்பது பழைய தாலாட்டு, சங்கமுகம்: காவிரி கடலொடு கலக்கும் இடம். சாயாவனம் : சாய்க்காடு. முக்குளம் : வெண்காட்டு முக்குளம். இத்தலத்திற்கு,சைவ எல்லப்பநாவலர் புராணம்பாடியுள்ளார். சம்பந்தர் தண்பொழில்துழி சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன். விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடிய பத்து இவைவல்லார், மண்பொலிய வாழ்ந்து. அவர்போய் வான்பொலியப் புகுவாரே அப்பர் ஆகத்து உமைஅடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவுஅசைத்து அங்கு ஆணேறு ஏறி. போகம் பலஉடைத்தாய்ப் பூதம்துழ. புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்: பாகிடுவான் சென்றேனைப் பற்றிநோக்கி, பரிசுஅழித்துஎன் வளைகவர்ந்தார் பாவி யேனை: மேக முகில்உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்த னாரே. சுந்தரர் பண்ணு வீராய்ப் பாட்டும் ஆனிர்! பத்தா சித்தம் பரவிக் கொண்டீர்! கண்ணு வீராங்க்கருத்தில் உம்மைக் கருது வார்கள் காணும்வண்ணம் மண்ணு ஸ்ராய் மதியம் வைத்திர்வான நாடர்மருவி ஏத்த விண்ணு ரீராய் நிற்பது என்னே வேலை சூழ்வெண் காடனீரே! மணிவாசகர் விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் குருந்தின் கிழ்அன்று இருந்த கொள்கையும்.